செவ்வாய், 27 அக்டோபர், 2009

புதிய புதிர்

குடும்பத்தில் குழப்பம் ஒருவன் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவேனா குடும்பத்தில் பிரச்சனை என்று புலம்பினான் .....அவர் சொன்னார் .நண்பா ... இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லே ... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்திடுவே..! நான் ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டேன் அவளுக்கு வயசுக்கு வந்த ஒரு மகள் இருந்தா. அவளை எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார் !!!!அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார். அதே சமயித்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு அதாவது தன மாமனாருக்கு மாமியாராயிட்டா.கொஞ்ச காலம் போயி என் மகள் அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க !!!அந்த பையன் என்னோட தம்பி முறை ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லையா.?ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன். அதாவது என் மனைவியின் பேரன். ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான். அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்சனையும் இல்லே. அப்புறம் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. இப்போ என் மகனின் சகோதரி அதாவது சித்தி ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி இல்லையா ???இன்னொரு குழப்பம் வேறே. என் அப்பா என் மகனுக்கு மச்சான் ஆயிட்டார்!!ஏன்னா.. என் மகனின் சகோதரியை அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே ???அப்படிப் பார்த்த என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும் என்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி ஆயிட்டாங்க !!இப்போ ஏன்னா ஆச்சுன்னா எனக்கு ஒரு மகன் இருக்கான். எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான். அவங்க இரண்டு பெரும் மாமனும் மருமகனும் இல்லையா ??அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான என் மனைவிக்கு மகளும் மாமியாருமான என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான என் மனைவியின் மகள் எனக்கு பிறந்த மகனுக்கு என்ன முறை ?? அத்தையா ?? பாட்டியா ??? அக்காவா ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக