கள்ளக்குறிச்சி : மொபைல் போனில் போட்ட நெம்பர்; தவறுதலாக இளம் பெண் ஒருவரின் போனுக்கு போக, அது காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஓராண்டாக போனில் பேசியே காதலித்தனர். அன்பாக கூல்டிரிங்ஸ் கடைக்கு அழைத்த காதலியை பார்க்க வந்த காதலனை, உறவினர்கள் சுற்றி வளைத்து போலீஸ் முன் னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் முத்து மகன் ராமமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஓராண் டுக்கு முன் ராமமூர்த்தி மொபைல் போனில் பேச முயன்றபோது, அது தவறுதலாக கள்ளக்குறிச்சி அடுத்த அலம்பளம் கதிர்வேல் மகள் அபிராமியின் மொபைல் நெம்பருக்கு இணைப்பு கிடைத் தது. தொடர்ந்து இருவரும் மொபைல்போனில் ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்தனர். தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த ராமமூர்த்தி, நேற்று மாலை அபிராமிக்கு போன் செய்தார். அப் போது அபிராமி கள்ளக்குறிச்சியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைக்கு வருமாறு, ராமமூர்த்தியை அழைத் தார்.
இதற்கிடையே தனது தந்தை இறந்துவிட்டதால், ராமமூர்த்தியை தனக்கு திருமணம் செய்து வைக் கும்படி உறவினர்களிடம் அபிராமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை அறியாத ராமமூர்த்தி நேற்று மாலை கள்ளக்குறிச்சிக்கு வந்த போது, அவரை சுற்றி வளைத்த அபிராமியின் உறவினர்கள், மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். போலீசார் அறிவுரையின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள விநாயகர் கோவிலில் ராமமூர்த்தி, அபிராமியை நேற்று மாலை திருமணம் செய்து கொண்டார். முகத்தை பார்க்காமல் காதலித்து வந்த ராமமூர்த்தி தனக்கு ஏற்பட்ட திடீர் திருமணத்தால், செய்வதறியாது திகைத்தபடி மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப் பட்டார்.
வாசகர் கருத்து
குடையை போட்டு கோழியை பிடித்தார் போல மாப்பிள்ளையை பிடித்தால் அந்த மாப்பிள்ளை (கோழி) எத்தனை நாள் தங்குவான். உண்மையான அன்பு இல்லாத இடத்த்தில் அந்த பெண் எப்படி வாழ முடியும்.
by s ரஹ்மான்`,India 11/1/2009 1:20:34 PM IST
இப்ப எல்லாம் செல் சிம் கார்டு அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள் !! இந்த கம்பெனியை விட அந்த கம்பனி இலவசம் சலுகை கிடைக்கிறது என்று , அது மாதிரி அந்த பெண் காதலை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் சரி !!!!
by V.S. Thirumalairaj,India 11/1/2009 12:29:55 PM IST
அந்த பையன் வீட்டிற்கு தெரிவித்து திருமணம் செய்து இருக்க வேண்டும் அதுதான் முறை !!! இந்த பெண் சதி(பிளான்) செய்து திருமணம் ஆன மாதிரி இருக்கு !!
by vs thirumalairaj,India 11/1/2009 12:14:26 PM IST
அந்த புள்ளைக்கு ஏதோ பிராப்ளம். அதுதான் இவன புடிச்சு மாட்டிக்கிருஜ்சு பி .ராஜா குமார் (துபாய்)
by raja rathnam,India 11/1/2009 10:09:47 AM IST
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் '''' அய்யோ சாமி இனிமே அந்த அனிதா பிள்ள கட்டு'''' thaks pa...............
by raj rathnam,India 11/1/2009 9:57:09 AM IST
ஐயோ பாவம், இப்படி மட்டிக்கிட்டியே கைப்புள்ள.
by K K,United Arab Emirates 11/1/2009 9:18:35 AM IST
ava vacchada aappu. machan good luck da. but be careful boys
by edwin edwinfrancis,United States 11/1/2009 9:00:40 AM IST
She is planned very well. At last she make a link with him in the name of marriage. Anyhow please dont do this type of non sense further. This is for Tamil nadu ladies police.
by A Hassan,India 10/31/2009 8:12:53 PM IST
I wishes them have a long and happy life. om nama shivaya.
by k செந்தில் குமார்,India 10/31/2009 1:31:02 PM IST
Think about the parents of the boy. Why do people always neglect the parents when it comes to love marriage? Don''t they have a say in this? Also a forced marriage can never last longer.
by N R,Yemen 10/31/2009 1:22:39 PM IST
they both understand well each other, this seems to be a matured love.
by mvk பசுபதி,Oman 10/31/2009 11:41:32 AM IST
மச்சான் உனக்கு வெச்சா ஆப்பு...........
by N Azarudeen,India 10/31/2009 11:25:05 AM IST
குடையை போட்டு கோழியை பிடித்தார் போல மாப்பிள்ளையை பிடித்தால் அந்த மாப்பிள்ளை (கோழி) எத்தனை நாள் தங்குவான். உண்மையான அன்பு இல்லாத இடத்த்தில் அந்த பெண் எப்படி வாழ முடியும்.
by G. ரவிராஜா,India 10/31/2009 9:26:30 AM IST
இது ரொம்ப கொடுமையான விஷயம். அந்த ஆளுக்கு ஏற்கனவே திருமணம் ஆயிருந்தால் அல்லது அவன் மோசமனவனாகவோ இல்லை குடிகாரனாகவோ இருந்திருந்தால் அந்த பெண்ணின் நிலைமை ? இந்த தவறான திருமணம் இனியும் நடைபெறாமல் இருக்க கவனம் தேவை .
by k manivannan,India 10/31/2009 9:20:22 AM IST
what happens if he is a total drunkard, useless fellow,diseased person. Marriage by women police arranged at tea shops must not be encouraged, it is one time in the whole life, any mistake on that day, these two only going to suffer till death not the women police.
by V Ramanathan,Bahrain 10/31/2009 1:07:53 AM IST
wish you happy married life sir,Love is great,.It has not seen the society or money or caste.Sharing of two pure hearts only.Finally LOVE IS GREAT.no words to describe it.Another kadhal kottai.
by goldvel,India 10/31/2009 12:28:01 AM IST
நல்ல பாடம் இது. இனியாவது கவனமாக இருங்கள், நினய்க்க நினய்க சிரிப்புதான் வருது. சந்தோசமாய் வாழ வாழ்த்துக்கள்.
by priya,India 10/30/2009 10:40:34 PM IST
காதலnnuபேரில் yemandittan
by m aji,India 10/30/2009 9:46:28 PM IST
aniyaayathukku maatikitiey raama moorthi.....thappa panninaalum correcta pannanum
by n siva,Kuwait 10/30/2009 9:46:05 PM IST
வேஸ்ட் பில்லோவ்ஸ்
by jana,India 10/30/2009 9:38:43 PM IST
அடடா ஒரு வடை போச்சி
by M GURU ,France 10/30/2009 9:27:41 PM IST
wish u happy married life. by jordan friends
by V mahesh,Jordan 10/30/2009 9:24:48 PM IST
ponkada unka loveum unka kalyanamum
by m malik basha,India 10/30/2009 9:21:26 PM IST
காதல்னா சும்மா இல்ல காதல் வாழ்க GOD BLESS YOU
by krishna,Singapore 10/30/2009 8:59:16 PM IST
PONGADA NEENGALUM UNGA KALYANAMUM !
by RAJA RAJA,India 10/30/2009 8:30:11 PM IST
அடப்பாவி அவன் போன்ல தானடா பேசினான். வேற எந்த தப்பும் பண்ணலயே?. அதுக்கு ஏண்டா இந்த அவசரக்கல்யாணம். இப்படின்னா பையன் வீட்டுல பொண்ணுக்கு என்ன மரியாதை கிடைக்கும். முட்டாள் பெண் போலிஸ்.
by M சுரெஷ்,India 10/30/2009 7:32:15 PM IST
KAATALUKU KAN ILLAI: KANAVUKAL OUNDU 100YERS VALA VALTUKERAN
by C SIVALINGAM,India 10/30/2009 7:18:54 PM IST
ஜோடி சூப்பர் மா. இது தான் உண்மையான லவ்.
by v அம்மு,India 10/30/2009 6:34:26 PM IST
enna kodumai saru.../ beware of youngh''s
by 123 sekar,India 10/30/2009 6:03:42 PM IST
ennada idhu pudhu trenda irukku.. pudusu pudusa kandupidikkirangale.. okkandu yosippangalooo??
by Venky,India 10/30/2009 5:47:42 PM IST
ஆகா...மனைவி அமைவதெல்லாம் aircel airtel bsnl vodaphone network operator kaiyil ullathu.
by balooo,India 10/30/2009 5:26:49 PM IST
Meendum oru Kadhal Kottai
by R ELANGO,India 10/30/2009 4:43:09 PM IST
unmaiyaga solkiren neenga nallaa irukkanum. kadal vaazhga.
by j nataraj,India 10/30/2009 4:25:26 PM IST
ippa eallam ponnunga rombaum ushara irukkanga. pasanga than kavanama irukkanum
by syed muthalib,Saudi Arabia 10/30/2009 3:58:54 PM IST
luckey man best of luck
by b lakshmanan,India 10/30/2009 3:38:52 PM IST
alavodu petru valamodu vaalka
by K முருகேசன்,India 10/30/2009 3:35:40 PM IST
love is blind.
by M. ESTHA,India 10/30/2009 3:16:52 PM IST
kalamellam kadhal vazhka aappu da machi god bless you
by p saravanan,India 10/30/2009 3:12:02 PM IST
Jodi poruttham super
by bass,India 10/30/2009 3:05:06 PM IST
போட்டோவில் யாருக்கு சந்தோஷம், யாருக்கு துக்கம் என்பது தெரியவில்லையே....
by K Dinesh,India 10/30/2009 2:53:05 PM IST
அப்போ பெண்கள் எல்லாம் வெறும் போகப் பொருளா. இவன் கடலை போடுவனா அப்புறம் கல்யாணம் பண்ணின அவனுக்கு ஆப்பாம். என்னங்கடா உங்க நீதி. உங்க தங்கை கூட யாராவது இது மாதிரி செய்தால் நீங்க என்ன செய்விங்கே .போ போ வந்துடாங்க கருத்து சொல்ல
by s rahuman,India 10/30/2009 2:29:34 PM IST
manaivi amaivathellaam iraivan kodutha varam
by n prakash,India 10/30/2009 2:18:18 PM IST
how many girls escaped like this by cheating boy friends
by R Ravindranath,India 10/30/2009 1:54:06 PM IST
aalam theriyama kaala vituputie maapla
by bala,United Arab Emirates 10/30/2009 1:32:24 PM IST
அணைத்தும் இலவசமா கிடைக்குமுன்னு எதிர் பார்கக கூடாது தம்பி
by k gobinath,India 10/30/2009 1:13:23 PM IST
காதல் கோட்டை
by M ஜோதி ,United Arab Emirates 10/30/2009 1:06:00 PM IST
Super. Naan ithai Cinemava eduka poren Padam title : Wrong Number Kaadhal
by N Velavan,India 10/30/2009 12:54:16 PM IST
வெரி குட் முடிவு .... சந்தோசம் காதல் ஜோடிகள் வாழ்க ....
by K Sureshkumar,India 10/30/2009 12:42:00 PM IST
காலமெல்லாம் காதல் வாழ்க
by M A Rahman,United Arab Emirates 10/30/2009 12:40:50 PM IST
நல்லது நடந்தா சரி வாழ்த்துக்கள்
by m siva,India 10/30/2009 12:13:11 PM IST
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
by Senthil,India 10/30/2009 11:49:53 AM IST
Maapu.... Aaappuu... Kannukku theriyathudi...
by R ராம் பீட்டர் ரஹீம்,India 10/30/2009 11:43:15 AM IST
MAAPU...... Vachutaangada Aaapppuu.... Phone la pesunama... Kadalaiya pottoma nu illama... ippadi mattikittiyaedi chella moorthi.....
by R பழனி,Saudi Arabia 10/30/2009 11:39:47 AM IST
இது ஆண்டவன் தீர்ப்பு, அண்ணன் எப்படி உனக்கு ஆப்பு
by v பாண்டியன்,India 10/30/2009 11:23:34 AM IST
ஆப்பு எனபது யாரும் யாருக்கும் வைக்கிறது இல்ல நாமா போயீ JUMP பண்ணி உட்காருகிறது
by A Anbuselvan,Philippines 10/30/2009 11:14:34 AM IST
arranged marriage
by mk kamal barcha,India 10/30/2009 10:50:30 AM IST
பெஸ்ட் கிளைமாக்ஸ். பட் தட் போலீஸ் ஆல்சோ NOT GOOD
by R JUSTIN,India 10/30/2009 10:45:08 AM IST
pombalangale ippadithan. kuthunga yejamaan, kuthunga
by A jack ,India 10/30/2009 10:42:28 AM IST
சூப்பர். நான் இதை வரவேற்கிறேன். வாழ்க காதல் ஜோடி
by t பராபரன்,Qatar 10/30/2009 10:36:56 AM IST
vendatha velai.. aappa thedi pooi ukkandhitiye mapila neee
by abbas,India 10/30/2009 10:19:05 AM IST
குட் லவ் ஸ்டோரி
by diva praveen,India 10/30/2009 10:11:47 AM IST
திடீர் திருமணம் திடீர்னு முடியாம இருந்தா சரி!!!!
by R. கோபிநாத்,India 10/30/2009 9:26:27 AM IST
ஐயோ ஐயோ என்ன கொடும ராமமூர்த்தி இது???
by csk Shanawaskhan,India 10/30/2009 8:47:45 AM IST
''Marriage with your parent's blessings. Love is not so important''
by S.M Abubucker,United Arab Emirates 10/30/2009 8:34:44 AM IST
interesting !! புத்திசாலி பெண் . வாழ்க வளமுடன், எல்லாம் நலமும் பெருகட்டும்
by SSK,India 10/30/2009 8:07:26 AM IST
ஹே ஹே சிக்கிட்டியா மாப்பு
by S mani,India 10/30/2009 8:03:10 AM IST
என்ன கருமம்டா இது? பாவம் அந்த பையன.
by பாவம் இந்த பையன ,India 10/30/2009 8:01:53 AM IST
வஞ்சங்களா ஆப்பு
by s p chezhian,India 10/30/2009 5:27:31 AM IST
kaadal valga By Alaudeen
by A ஷேய்க் அளுடின்,India 10/30/2009 3:13:00 AM IST
வெச்சான்களா உனக்கு ஆப்பு.
by m paneer,India 10/30/2009 12:56:10 AM IST
நன்றி: தினமலர்.
ஞாயிறு, 1 நவம்பர், 2009
செவ்வாய், 27 அக்டோபர், 2009
புதிய புதிர்
குடும்பத்தில் குழப்பம் ஒருவன் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவேனா குடும்பத்தில் பிரச்சனை என்று புலம்பினான் .....அவர் சொன்னார் .நண்பா ... இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லே ... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்திடுவே..! நான் ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டேன் அவளுக்கு வயசுக்கு வந்த ஒரு மகள் இருந்தா. அவளை எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார் !!!!அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார். அதே சமயித்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு அதாவது தன மாமனாருக்கு மாமியாராயிட்டா.கொஞ்ச காலம் போயி என் மகள் அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க !!!அந்த பையன் என்னோட தம்பி முறை ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லையா.?ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன். அதாவது என் மனைவியின் பேரன். ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான். அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்சனையும் இல்லே. அப்புறம் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. இப்போ என் மகனின் சகோதரி அதாவது சித்தி ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி இல்லையா ???இன்னொரு குழப்பம் வேறே. என் அப்பா என் மகனுக்கு மச்சான் ஆயிட்டார்!!ஏன்னா.. என் மகனின் சகோதரியை அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே ???அப்படிப் பார்த்த என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும் என்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி ஆயிட்டாங்க !!இப்போ ஏன்னா ஆச்சுன்னா எனக்கு ஒரு மகன் இருக்கான். எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான். அவங்க இரண்டு பெரும் மாமனும் மருமகனும் இல்லையா ??அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான என் மனைவிக்கு மகளும் மாமியாருமான என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான என் மனைவியின் மகள் எனக்கு பிறந்த மகனுக்கு என்ன முறை ?? அத்தையா ?? பாட்டியா ??? அக்காவா ???
திங்கள், 12 அக்டோபர், 2009
”குடிப்பவர்களின் குடும்பங்கள் மிகமிகக் குறைவான வருவாயில் வாழக்கற்றுக் கொண்டிருக்கின்றன…” என்றார் டாக்டர். தினம் முந்நூறு ரூபாய் சம்பாதிப்பவர் ஐம்பது ரூபாய்கூட குடும்பத்துக்குக் கொடுப்பதில்லை. அந்த சிறு தொகையில் அனைத்துத்தேவைகளையும் ஒடுக்கிக் கொண்டு அந்த குழந்தைகளை மனைவி வளர்க்கிறாள். சட்டென்று குடியை குடும்பத்தலைவர் விடும்போது கிட்டத்தட்ட முக்கால்பங்கு சம்பளம் மிச்சமாகிவிடுகிறது. சிலநாட்களிலேயே குடும்பம் மேலேறிவிடுகிறது.
குடி ஒரு பண்பாட்டு அம்சமோ ஒரு வாழ்க்கைமுறையோ கேளிக்கையோ ஒன்றுமல்ல, அது ஒருவகை நோய் மட்டுமே. நோயாக மட்டுமே அதைக் கண்டு அதற்கு சிகிழ்ச்சை அளித்து குணப்படுத்துவதே தேவையான செயலாகும். பெரும்பாலான குடிகாரர்கள் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். சட்டென்று உடல் அதற்குப் பழகிவிடுகிறது. அந்தப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்துகிறது. அந்த பழக்கத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் மனிதர்கள். உடல்உளைச்சல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை. அந்த நியாயங்களுக்குள் சென்று விவாதிப்பதில் பொருளே இல்லை. நோயை குணப்படுத்துவதே தேவை
குடி ஒரு பண்பாட்டு அம்சமோ ஒரு வாழ்க்கைமுறையோ கேளிக்கையோ ஒன்றுமல்ல, அது ஒருவகை நோய் மட்டுமே. நோயாக மட்டுமே அதைக் கண்டு அதற்கு சிகிழ்ச்சை அளித்து குணப்படுத்துவதே தேவையான செயலாகும். பெரும்பாலான குடிகாரர்கள் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். சட்டென்று உடல் அதற்குப் பழகிவிடுகிறது. அந்தப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்துகிறது. அந்த பழக்கத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் மனிதர்கள். உடல்உளைச்சல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை. அந்த நியாயங்களுக்குள் சென்று விவாதிப்பதில் பொருளே இல்லை. நோயை குணப்படுத்துவதே தேவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)