சனி, 17 ஜூலை, 2010

எப்படிப்பா சமாளிச்சே சூப்பர்

திருமணம் ஆகவில்லை’ என்று கூறி, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மெக்கானிக் கம்பி எண்ணுகிறார்.
அம்பத்தூர் மேனாம்பேடு கம்பர் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (43). மெக்கானிக். இவரது மனைவி ஹேமலதா (38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
திருமுல்லைவாயல் திரிசக்தி நகர் நன்னூல் தெருவை சேர்ந்த பாரதி (30) என்பவருடன் சுரேஷ்பாபுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. 1397967985 தனக்கு திருமணம் ஆகவில்லை’ என்று கூறி பாரதியை காதலித்தார். 2001ம் ஆண்டு திருவேற்காடு கோயிலில் பாரதியை திருமணம் செய்திருக்கிறார். பின்னர், திருமுல்லைவாயலில் தனிக் குடித்தனம் நடத்தினார். சுரேஷ் பாபு & பாரதி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இரண்டு வீடுகளையும் கடந்த 9 ஆண்டுகளாக சுரேஷ்பாபு திறம்பட நடத்தி வந்தார். இந்நிலையில், தனக்கு மட்டும் சுரேஷ்பாபு கணவனாக இல்லை என்பதை பாரதி லேட்டாக கண்டுபிடித்தார். கணவனை கண்காணித்தார். அவருக்கு ஏற்கனவே பெரிய வீடு இருப்பதை அறிந்தார்.
இதையடுத்து பாரதி நேற்று திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரியாசுதீன், எஸ்ஐ ஸ்டான்லி ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சுரேஷ்பாபுவை கைது செய்தனர். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
9 வருடத்துக்கு பிறகு கம்பி எண்ணுகிறார்